காவி முண்டாசு நாயகனே... (விவேகானந்தர்)

கேள்வி ஞானத்தால்
கேட்டறிந்தேன் உன்னை..
தேடித்தேடி படித்தேன்
விருட்சமாய் விரிந்தாய் என்னுள்...
 

அறியாத விசயத்தை
ஆழமாய் விதைத்தாய்...
பயத்தைப் போக்கி
பலத்தை தந்தாய்...




என்னுள் உறங்கிய என்னை .. 

எந்தன் மூலமே எழுப்பி
என்னை
எனக்கு உணர்த்தினாய்..

ஆத்ம பலத்தை
ஆழமாய் விதைத்தாய்..
தேசிய உணர்வை
தேகமெங்கும் ஊட்டினாய்..

பாவமில்லாத
புண்ணியன் நானென்றாய்...
உலகை மாற்றும்
உன்னத சக்தி நானென்றாய்...

அனைத்தையும் உணர்த்தி
அழியாப் புகழ் பெற்ற
காவி முண்டாசு நாயகனே...

என்றும் ஒளிர்வீர்
என்னுள் தீச்சுடராய்
மேல்நோக்கி...

- சதீஷ் விவேகா

Comments

Popular posts from this blog

வாழ்க்கை வாழ்வதற்கே!

BIGG BOSS HINDI - SEASON 11 - VOTING

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பின்னணியும் உள்ளரசியலும் !