சிகரம் மஞ்சரி - 01
வணக்கம் வாசகர்களே! இன்று முதல் உங்கள் 'சிகரம்' நாளேடுகள் மற்றும் சஞ்சிகைகள் மீதான தனது பார்வையை உங்களுக்கு வழங்கவுள்ளது. முதல் பக்கத்தின் மற்றும் முக்கியச் செய்திகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படும். இன்று நாம் காணவிருப்பது இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்த சஞ்சிகையான 'வண்ண வானவில்' சஞ்சிகை மீதான பார்வை.
இன்று நம் கையில் இருப்பது நவம்பர்-2017 க்கான 'வண்ண வானவில்' (பருவம் 08 உதயம் 85) பதிப்பு. முன்னட்டையை மெர்சல் விஜய்யும் பின்னட்டையை காஜலும் அலங்கரித்திருக்கிறார்கள். முன் உள்ளட்டையில் நடிகை சமந்தாவின் புகைப்படத்தொகுப்பு இடம்பெற்றுள்ளது. பின் உள்ளட்டையில் வாசகர்களின் தற்படத் (Selfie) தொகுப்பை காணமுடிகிறது. நடுப்பக்கம் எப்போதும் போல வெள்ளித்திரை (Cinema) செய்திகளைத் தாங்கி வந்திருக்கிறது. நடுப்பக்க சம்பிரதாயம் எத்தனை காலம் கடந்தாலும் அப்படியே தான் இருக்கிறது.
நான்காம் மற்றும் 27ஆம் பக்கங்களில் பேஸ்புக் தத்துவங்கள், பகிர்வுகள் மற்றும் குறுஞ்செய்தி தத்துவங்கள் இடம்பெற்றுள்ளன. 15ஆம் பக்கம் இராசி பலன்களும் 29ஆம் பக்கம் எண்கணித பலன்களும் இடம் பிடித்துள்ளன. 25ஆம் பக்கம் திரட் ஜிமிக்கி செய்வதற்கான குறிப்புகளை வழங்குகின்றது. 12ஆம் பக்கம் திருநகர் நடராசா எழுதிய 'அவர் வருவாரா' சிறுகதை இடம்பெற்றுள்ளது. 22ஆம் பக்கம் ஸ்டார் பாடல் ஆக மெர்சல் படத்தில் இடம்பெற்ற நீ தானே என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
மெர்சல் திரைப்படம் பலவித சர்ச்சைகளில் சிக்கித் தவித்துவருவது நீங்கள் அறிந்ததே. அந்த சர்ச்சைகள் குறித்த விரிவான பார்வையை 'மிரட்டிய மெர்சல் - எகிறிய கேள்விகள் - திணறிய அரசு' என்று 3ஆம் மற்றும் 32ஆம் பக்கங்களில் வண்ண வானவில் வழங்கியிருக்கிறது. 'இலங்கைத் தமிழ் திரையுலகம்' என்னும் மகுடத்தில் தம்பி ஐயா தேவதாஸ் தன் சுவையான திரைப்பட அனுபவங்களை ஐந்தாம் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். ஆறாம் பக்கத்தில் ஆதவனின் 'பிச்சைக்காரனின் புண்ணை இப்படியே விட்டுவைப்பதா?' என்னும் இனப்பிரச்சினை குறித்த அரசியல் ஆய்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
'இலங்கையின் ஆதிமனிதன் வாழ்ந்த புளத்சிங்கள பாஹியான் கல்குகை' என்னும் தொல்லியல் ஆய்வு குறித்த கட்டுரை ஏழாம் பக்கம் காணப்படுகின்றது. இன்னும் சிறைச்சாலைக் கதைகள் தொடர், வேட்டையும் வினையும் என்னும் தலைப்பிலான ராஜசிங்க மன்னனின் கதை, பேய்க்கதை, குறுக்கெழுத்துப் போட்டி, பேஸ்புக் கள்ளக் காதல் பற்றிய கதை, சமையல் குறிப்பு மற்றும் கேள்வி பதில் என இன்னோரன்ன விடயங்களைத் தாங்கி வெளிவந்திருக்கிறது நவம்பர் மாத வண்ண வானவில்.
மலையகத்தின் ஹற்றன் நகரம் குறித்த வரலாற்றின் இறுதிப்பகுதி 'தொப்பித் தோட்டம் என்றழைக்கப்பட்ட ஹற்றன் நகரம் - மகாத்மா காந்தி ஹற்றனுக்கு வந்த போது' என்ற தலைப்பில் ஒன்பதாம் பக்கத்தை அலங்கரித்துள்ளது. மேலும் நட்சத்திர முகநூல் பகுதியில் பேஸ்புக்கில் வளர்ந்து வரும் மலையகம் கொட்டகலையைச் சேர்ந்த மனோஜ் என்னும் இளைஞனைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் வாசிப்புக்கு விருந்தளிக்கும் ஒரு சஞ்சிகையாக நவம்பர் மாத வண்ண வானவில் சஞ்சிகை அமைந்திருக்கிறது!

அருமையாக உள்ளது சஞ்சிகை விமர்சனம். தொடருக !
ReplyDelete