வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம், வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. ஆனால் நாம் வாழ்க்கையை வாழ்கிறோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். நான் தினமும் காலையில் எழுகிறேன்; வேலைக்குச் செல்கிறேன்; இரவு நன்றாக உறங்குகிறேன், ஆகவே நான் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுவெல்லாம் வாழ்க்கை அல்ல. உங்களுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால் அது தான் வாழ்க்கை. காலை எட்டு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. அதற்காக தயாராவதோ, பணிக்குச் செல்வதோ வாழ்க்கை அல்ல. அது இன்னொருவர் உங்கள் நிமிடத்தை தீர்மானிக்கிறார். உங்களுக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க விரும்பினாலும் உங்களால் முடியாது. தினமும் வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மாற்ற முடியாதா? முடியும்! இதுவெல்லாம் வாழ்க்கை இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையை வாழ்வதுதான் எப்படி? இப்படித்தான். உங்களுக்கு எது விருப்பமோ அதைப் படியுங்கள், உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அந்த வேலையையே செய்யுங்கள். இப்படியாக ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுடையதாக்குங்கள். இதற்கு முறைய...

Comments
Post a Comment