சொல்லு நல்லாட்சி அரசே!

தமிழரின் மண்ணில் சிங்களவரைக் குடியேற்றி
தமிழரின் உடைமைகளைப் பொறுக்கி எடுத்து
தமிழரின் உயிர்களைக் குடித்துக் குடித்து
தமிழரின் இலங்கையைச் சிங்களவரின் உடைமையாக்க
தேசிய கொள்ளைகள் மற்றும்
பொருளாதார விவகாரங்கள் அமைச்சு ஒன்றை
நல்லாட்சி அரசு கொண்டு வந்து கொள்ளையிட
நாற்காலி துடைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்
மூன்று வேளையும் மூக்குமுட்டத் தின்றுபோட்டு
விடிய விடிய நீட்டிநிமிர்ந்து தூங்கிக் கிடந்தால்
தமிழரின் தாயகமாம் இலங்கையில்
தமிழ் வாழுமா? தமிழர் வாழ்வரா?
தமிழின் நிலை இப்படி என்றால்
தமிழரின் நிலை எப்படி என்று சொல்லு
நல்லாட்சி அரசே!


 

Comments

Popular posts from this blog

வாழ்க்கை வாழ்வதற்கே!

BIGG BOSS HINDI - SEASON 11 - VOTING

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பின்னணியும் உள்ளரசியலும் !