இலங்கை 70 வது சுதந்திர தினம் - 04.02.2018 - SRILANKA 70TH INDEPENDENCE DAY
இலங்கை தனது 70 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகிள் இணையத்தளம் விசேட டூடில் வெளியிட்டு கௌவரவப்படுத்தியுள்ளது. உலகின் 118 நாடுகளில் உள்ள தூதரகங்களில் 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடாகியுள்ளது. இலங்கையில் 70 வது சுதந்திர தினம் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெறுகிறது. காவல் துறை, இராணுவம் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு பிரிவுகளின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை சுதந்திர தின பிரதான நிகழ்வில் இடம்பிடிக்கும். இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 1000 ரூபாய் நாணயத்தாள். இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட 1000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை யின் தொகுப்பை அத தெரண இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதனை இங்கு தருகிறோம். (நன்றி : அத தெரண தமிழ் ). "இன, மத, பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமாதானம் சகவாழ்வை மக்களுக...